Tuesday, 7 July 2015

பண்ணை தோற்றம் மற்றும் புகைப்படங்கள் .

பண்ணை ஓடை கற்கள் என்று சொல்ல கூடிய சுண்ணாம்பு கற்கள் கொண்டது. எங்கள் பகுதியல் PAP பாசனம் வந்த பொழுது என் தந்தை இன் கடின உழைப்பால் கரிசல் மண் மற்றும் குளங்களில் இருந்து கொண்டு வந்த வண்டல் மண் முலம் செழிப்பான தோட்டமாக மாற்றினார்.அந்த தோட்டத்தில் என் தாய் தந்தை இருவரின் உழைப்பால் பருத்தி , கத்தரி காய், தக்காளி , மஞ்சள் , வாழை , மற்றும் பாசன தண்ணீர் வரும் பொழுது நெல் ஆகியவை பட்டது .
காலபோக்கில் ஆள் பற்றாகுறை மற்றும் தொழில் நிமித்தமாக என் தந்தை திருப்பூர் வந்தது ஆகியவற்றால் இன்று தென்னை மட்டும் உள்ளது.

பண்ணையின் நுழைவு பகுதி . ஒரு சிறிய குட்டை மேட்டின்மீது செல்லும் .

 பண்ணைக்கு அருகில் உள்ள சிறிய குட்டை இல் PAP பாசன தண்ணீர் நிறைந்து கிடந்த ஒரு பொழுது . (இன்னும் என் மனதில் பசுமையான நினைவுகள் )
 பண்ணை வரும் வழி .ஒரு புறம் மக்காசோளம் மற்றொரு புறம் தென்னை (மக்காசோளம் அருகில் இருப்பவர் தோட்ட பயிர்

PAP பாசனத்தின் பொது வயல் காடு. மழை இல்லாத இன்றிய நிலை  வெறும் காடாக உள்ளது .

தோட்டத்தின் அருகில் உள்ள குட்டை தண்ணீர் நிரம்பி இருந்த பொழுது. மீண்டும் எப்பொழுது இந்த காட்சி திரும்பும் என்று தெரிய வில்லை .

எஸ்.டி.கே. பண்ணை வெங்காயம் நடவு .

விரைவில் நாட்டு மாடும் வேண்டும் என்ற நோக்கத்துடன் , இபோதைய கோமாதா


தோட்டத்தில் இருக்கும் பாசன வசதிகள் . நிலத்தடி நீர் மட்டம் இபொழுது 1000 அடியை கடந்து விட்டது. இது வரும்கால குழந்தைகளுக்கு நாம் இட்டு செல்லும் சாபம் . 

STK பண்ணை மற்றும் என்னை பற்றி ஓர் அறிமுகம் .

நான் ஜி.கார்த்தி கேயன் , திருப்பூர் நகரில் பனியன் தொழில் புரிந்து வந்தாலும் இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் என் குல தொழிலுக்கு அடித்தளம் அமைத்து உள்ளேன் .

STK FARM ஆனது திருப்பூரில் இருந்து தாரபுரம் செல்லும் சாலையில் பதினைதாவது கிலோமீட்டர் இல்  உள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்து உள்ளது .

சிறிய வயதில் மாட்டுவண்டி ஒட்டி , மாடு பூட்டி ஏர் ஒட்டி , மாட்டு கட்டாந்தரை இல் சாணி அள்ளி இருந்தாலும் என் கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருப்பூர் தொழில் அழைத்து கொண்டது .

சிறிய வயதில் தோட்டத்தில் சுத்திகொண்டு இருக்கும் போது ரசாயன உரம் மற்றும் மருந்துகள் பற்றிய புரிதல் இல்லை . என் தந்தை விவசாயி என்றாலும் மருந்து கடை காரர்  என்ன உரம் மற்றும் மருந்து பரிந்துரை செய்கிறாரோ அந்த மருந்து எங்கள் மண்ணில் இருந்தது.

2012 ஆம் ஆண்டு செய்த தவறுகள் எல்லாம் பசுமை விகடன் புத்தகத்தின் மூலம் அறிந்தாலும்.2015 ஆம் ஆண்டு தான் என்னால் இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்க முடிந்தது.


2015 ஜூன் மாதம் என் 35 ஆம் பிறந்தநாளில் இருந்து எளிய வாழ்வியலுக்கும் சமுதாயத்தின் மீது உள்ள அக்கரையாலும் இயற்கை வழிக்கு திரும்பி உள்ளேன் .
இன்னும் இயற்கையை அறிந்துகொள்ள பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. இவ்வளவு நாட்களும் கடிவாளம் இல்லாத என் வாழ்கை இப்பொழுது தான் அர்த்தம் நிறைந்ததாக உணர்கின்றேன் .